ஹோம் /நியூஸ் /இந்தியா /

குளிர்கால கூட்டத்தொடரில் 1,500 சட்டங்களை நீக்க மத்திய அரசு முடிவு - மத்திய சட்ட அமைச்சர் தகவல்

குளிர்கால கூட்டத்தொடரில் 1,500 சட்டங்களை நீக்க மத்திய அரசு முடிவு - மத்திய சட்ட அமைச்சர் தகவல்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் 1,500 சட்டங்களை நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Meghalaya, India

  மேகாலயா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

  தலைநகர் ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் ரிஜிஜு , "வட கிழக்கு பிராந்தியத்தில் மத்திய பாஜக அரசு மிகுந்து அக்கறை கொண்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, இப்பிராந்திரத்தை செழிப்பு மிக்கதாக மாற்றி நாட்டை வலிமையாக்குவதே லட்சியமாக கொண்டுள்ளது. பொது மக்களின் அன்றாட வாழ்வுக்கு சில பழைய சட்டங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன. மக்களின் சுமைகளை குறைக்க வேண்டியது அரசின் கடமை.

  அரசின் தலையீடு மிகக்குறைவாகக் கொண்டு அமைதியான வாழ்வை அவர்கள் வாழ வழி செய்வதே பிரதமர் மோடியின் விருப்பம். எனவே, புழக்கத்தில் இல்லாத, பழமையான சட்டங்கள் அனைத்தையும் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேவையற்ற சட்டங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு கொண்டுவரப்பட்டவை.

  இதையும் படிங்க: ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

  எனவே, தற்காலத்தில் அவற்றுக்கு எந்த தேவையும் இல்லை. வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் 1,500 சட்டங்களை நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான மசோதாக்களை நான் தயார் செய்து வைத்துள்ளேன்" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Law, Meghalaya, Parliament, PM Modi