பிரசாரங்களில் இழுக்கப்படும் பாதுகாப்பு படைகள்... முன்னாள் தளபதிகள், வீரர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!

யோகி ஆதித்யநாத், “மோடியின் படை” என்று ராணுவத்தை குறிப்பிட்டார்.

news18
Updated: April 12, 2019, 12:24 PM IST
பிரசாரங்களில் இழுக்கப்படும் பாதுகாப்பு படைகள்... முன்னாள் தளபதிகள், வீரர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!
ராம்நாத் கோவிந்த்
news18
Updated: April 12, 2019, 12:24 PM IST
தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு படைகள் பற்றி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் தளபதிகள் மற்றும் 150 முன்னாள் ராணுவத்தினர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. நேற்று முதற்கட்ட தேர்தல் தொடங்கியது. மே 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், மக்களை கவர தேசபக்தி, தேசியக்கொடி, ராணுவம் என்று உணர்வுப்பூர்வமான டாபிக்கில் பேசி வருகின்றனர்.

பாஜகவின் தேர்தல் பிரசாரங்களில் ராணுவம் இழுக்கப்படுவது கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் என்று டாப் பாஜக தலைவர்கள் 10 வார்த்தை பிரசாரத்தில் பேசினால், 8 வார்த்தை ராணுவம் என்றே இருக்கிறது.

யோகி ஆதித்யநாத், “மோடியின் படை” என்று ராணுவத்தை குறிப்பிட்டார். இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு படைகள் பற்றி பேசுவதை எதிர்த்து முன்னாள் தளபதிகள், 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முப்படைகளின் தளபதி என்ற முறையில் ராம்நாத் கோவிந்துக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களை அரசியல் கட்சிகள் தங்களின் ஓட்டுகளுக்காக பயன்படுத்துவது நாட்டுக்கே எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Also See...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...