இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன் மூலம் ஆயுதம், வெடிபொருள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை அச்சுறுத்தலாக உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 553 கிமீ தொலைவுக்கான இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த பகுதியில் சில ஆண்டுகளாகவே ட்ரோன் மூலம் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன.
எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையால் இந்தியா பல ஆண்டுகளாகவே நேரடியாக பாதிப்புக்கு ஆளான நிலையில், போதைப்பொருள் ஆயுத கடத்தல் போன்ற மறைமுக சாவல்களையும் எல்லையில் வீரர்கள் சந்தித்து வருகின்றனர். தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற காலம் என்பதால், ட்ரோன்கள் மூலம் இவை பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகின்றன. முதன் முதலாக 2019ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அமிர்தசரஸ், தான் தரன், பெரோஸ்பூர், குர்தாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த ட்ரோன்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் எல்லை பாதுகாப்பு படையினர் ட்ரோன் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இந்தாண்டு மட்டும் பஞ்சாப் எல்லை பகுதியில் 150 ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இவற்றில் 10 ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். கடந்த வாரம் மட்டும் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 ட்ரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: குளிர்கால கூட்டத்தொடரில் 1,500 சட்டங்களை நீக்க மத்திய அரசு முடிவு - மத்திய சட்ட அமைச்சர் தகவல்
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற சட்டவிரோத சக்திகளும், கடத்தல் கும்பலும் அதிநவீன சீன ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.இவை மிகக்குறைந்த ஒலியில் மிக உயரத்தில் பறக்கக் கூடியவை. இவை பாதுகாப்பு படையினருக்கு சவாலாக உள்ளது. எனவே, இதற்கு தீர்வு காண ட்ரோன் மூலம் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பாக துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாதுகாப்பு படை அறிவித்திருந்தது. இந்நிலையில், எல்லையில் கடத்தலில் ஈடுபடும் நபர்களை சுட்டு வீழ்த்தவும் பாதுகாப்பு படையினர் கடந்த வாரம் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BSF, Drone, India and Pakistan, Punjab