யாருமே உரிமை கோராத ஆயிரக் கணக்கான கொரோனா நோயாளிகள் உடல்கள் பெங்களூருவில் எரிப்பு

மாதிரிப்படம்.

பெங்களூருவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியான ஆயிரக்கணக்கான நோயாளிகள் உடல்களுக்கு உரிமை கோர யாருமே இல்லை என்பதால் அவர்கள் உடல்கள் எரிக்கப்பட்டன.

 • Share this:
  பெங்களூருவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியான ஆயிரக்கணக்கான நோயாளிகள் உடல்களுக்கு உரிமை கோர யாருமே இல்லை என்பதால் அவர்கள் உடல்கள் எரிக்கப்பட்டன.

  கர்நாடகா வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா இதில் 566 உடல்களின் சாம்பலை கங்கையில் கரைத்தார்.

  கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமையன்று 14,304 பேருக்கு புதிதாக கோவிட் தொற்றியுள்ளாது, 464 பேர் ஒரே நாளில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Also Read: அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு- மத்திய அரசு

  தடுப்பூசி மையத்தை மாற்றச் சொன்ன பாஜக எம்.எல்.ஏ:

  பெங்களூரு புவனேஸ்வரி நகர் தடுப்பூசி மையத்தை பாஜக எம்.எல்.ஏ. எஸ். ரகு மாற்றச் சொல்லியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதன் மூலம் பாஜக தொண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்காக தடுப்பூசி திட்டத்தை இவர் கபளீகரம் செய்கிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துள்ளன.

  Also Read: கன்னியாகுமரியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்..

  புவனேஸ்வரி நகர் தடுப்பூசி மையத்தில் 300 பேருக்கு தடுப்பூசி டோக்கன் கொடுக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு தடுப்பூசி போடப்படாமல் விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்நிலையில் எம்.எல்.ஏ. தன் சொந்த கல்யாண மண்டபத்துக்கு தடுப்பூசி மையத்தை மாற்றி, இவர் ஏதோ இலவசமாக தடுப்பூசி போடுவது போல் வாசலில் பேனர்கள் வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டோக்கன் வாங்கியவர்கள் கல்யாண மண்டபத்துக்கு வந்த போது அங்கு வாக்சின்கள் தீர்ந்து விட்டன, பாஜக தொண்டர்களுக்கு வாக்சின்கள் போடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன.

  Also Read: 3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியாக திகழும் டெல்லி மருத்துவமனைகள்!

  வழக்கம் போல பாஜக எம்.எல்.ஏ, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க போதிய இடவசதி இல்லை என்று கூறி தன் மண்டபத்துக்கு மாற்றியதாக அவர் காரணம் கூறினார்.
  Published by:Muthukumar
  First published: