• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 48 மணி நேரத்தில் கும்பமேளா விழாவில் 1000 பேருக்கு கொரோனா தொற்று

48 மணி நேரத்தில் கும்பமேளா விழாவில் 1000 பேருக்கு கொரோனா தொற்று

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு விழாக்களில் ஒன்றான கும்பமேளா விழா நடைபெறும் இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விழாவிற்கு முகக்கவசம் அணியாமல் வருகை தந்த பெரும்பாலானோர் கங்கை நதியில் நீராடியுள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 8,000-த்தை நெருங்கியுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. சுமார் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம். இதற்காக ஹரித்வாருக்கு நாளொன்றுக்கு 10 லட்சம் பேர் வருகை தருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த விழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்த மகா கும்பமேளா விழாவில், கங்கை நதியில் நீராட நான்கு நாட்கள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இதில் மூன்றாவது தினமான இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதிக்கரையில் குவிந்து நீராடி வருகின்றனர். எனினும், அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என தெரிகிறது. பெரும்பாலான பகுதிகளில் முகக்கவசம் அணிவது, உடல் வெப்பநிலை பரிசோதிப்பது போன்ற விதிமுறைகள் முறையாக பின்பற்றாத காரணத்தால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், விழா முடிவடையும் வரை தினசரி லட்சக்கணக்கான மக்கள், ஹரித்துவாருக்கு வருகை தரும் காரணத்தால், அங்கு கொரோனா பரவல் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: