நிலுவைத் தொகையை விரைவாக வழங்கவேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்..

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 10,775 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

நிலுவைத் தொகையை விரைவாக வழங்கவேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்..
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்,1483 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், 2017-18-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையான 4321 கோடி ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதற்கு  நன்றி தெரிவித்தார். மேலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 10775 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 13, 2020)


கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ஈடுகட்டும் முறை குறித்து ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். எனினும், மாநிலங்கள் கடன் பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும் என்றும், மத்திய அரசால் கடன் வாங்கித் தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading