அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

அயோத்தியில் இன்று வெளிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - வெளியாட்களுக்கு அனுமதி இல்லை
அயோத்தியில் பாதுகாப்பு
  • Share this:
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், கொரோனா அச்சம் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விழா நடைபெறும் இடம் உட்பட அயோத்தி நகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளையும் போலீசார் அடைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், அயோத்தியில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


அயோத்தியில் இன்று கோயில், மசூதிகள் திறந்திருந்தாலும், வேறு எந்த மதச்சடங்குகளும், நிகழ்வுகளும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading