அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளுள் அதிபர் ட்ரம்புக்கு இந்தியாவில்தான் அதிக சொத்துகள் என தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் கோடீஸ்வரரான ட்ரம்ப்புக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உண்டு, அவற்றுள் அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் அதிக சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா என்றாலே ஏனோ ட்ரம்ப்புக்கு ஒரு மயக்கம். 1990-இல் அட்லாண்டா நகரில் அவர் துவங்கிய கசினோவுடன் கூடிய ஓட்டலுக்கு ’ட்ரம்ப் தாஜ் மஹால்’ என பெயரிட்டார்.
அமெரிக்க அதிபராவதற்கு சில காலம் முன்பாக இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில ரியல் எஸ்டேட் துறையில் பல நூறு கோடி ரூபாயை அவரது குடும்பம் முதலீடு செய்தது.
இந்தியாவில் ட்ரம்ப்பின் முதல் சொத்து புனேவில் உள்ள 23 அடுக்குமாடி கட்டடமான ’ட்ரம்ப் டவர்’ ஆகும். இதுபோல், கொல்கத்தாவில் உள்ள 36 அடுக்குமாடி கட்டடமான ட்ரம்ப் டவர் அந்நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது. டெல்லியிலும் 50 அடுக்குமாடி ட்ரம்ப் டவர்சும் அவரது குடும்பத்தின் இந்திய முதலீடுகளுள் ஒன்றாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மும்பையில் உள்ள 75 மாடி ட்ரம்ப் டவர் மிகப் பெரிய முதலீடாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அடுக்குமாடி வீடுகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஜெட் விமானத்தையே ட்ரம்ப் குடும்பம் தந்துள்ளது. இந்த கட்டட திறப்பு விழாவுக்கு ட்ரம்ப்பின் இரு மகன்கள் வந்திருந்தனர். டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், மோடியையும் சந்தித்தார்.
புனேவில் ட்ரம்ப் நிறுவனத்துடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிய நிறுவனத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு பங்குகள் உள்ளன. மும்பையில் தொழில் பங்குதாரரான மங்கள் பிரபாத் பாஜக பிரமுகர் ஆவார். இதுபோல், பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் ட்ரம்ப்பின் தொழில் பங்குதாரர்களாக உள்ளனர்.
ட்ரம்ப்பின் பெயர் உள்ளதால் மற்ற நிறுவனங்களை விட அதிகமான குடியிருப்புகள் விற்பனையானாலும் பொருளாதார மந்தநிலையால் பல வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. ட்ரம்ப்பின் வருகை அவற்றின் விற்பனைக்கு உதவக்கூடும். இதுவும் விரைவில் நடக்கவுள்ள அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் உள்ள கணிசமான இந்தியர்களின் வாக்குகளுமே ட்ரம்ப்பின் இந்திய வருகையின் பின்னணியில் இருப்பதாக அமெரிக்காவில் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, Trump India Visit, USA