Home /News /national /

கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

மழை

மழை

மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

  • News18
  • Last Updated :
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முடிவடையாததால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தமான் மற்றும் அரபிக்கடலில் கடந்த ஒன்றாம் தேதி மழைப்பொழிவு தொடங்கியது. அப்போதிருந்தே கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழையானது தென் மாநிலங்களில் 64 முதல் 74 சென்டி மீட்டர் மழையை தரும் என்றும், வெப்பநிலையைப் பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த மழை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையில் இடியுடன் கூடிய பலத்த மழை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால், மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவியது.

திருச்சியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு கழிவு நீருடன் கலந்த மழைநீர் குளம் போல் தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். எனினும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

Also see... பாலகோட் தாக்குதலில் பயன்படுத்திய குண்டுகளை வாங்க இஸ்ரேலுடன் இந்தியா ஒப்புதல்!

Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Indian Meteorological Center, Rain, South west Monsoon rain

அடுத்த செய்தி