ஜாமீனில் வெளிவந்தும் அடங்கவில்லை: ‘பாகிஸ்தான் ஒழிக’என்று கோஷமிடக்கோரி ஒருவரை அடித்துத் உதைத்தவர் மீண்டும் கைது

டெல்லி சம்பவம்.

பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த அஜய் கோஸ்வாமி என்ற நபர் வெளியே வந்து வடகிழக்கு டெல்லியில் இன்னொரு நபரை அடித்துத் துன்புறுத்தி ‘பாகிஸ்தான் ஒழிக’ என்று கூறவைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

 • Share this:
  பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த அஜய் கோஸ்வாமி என்ற நபர் வெளியே வந்து வடகிழக்கு டெல்லியில் இன்னொரு நபரை அடித்துத் துன்புறுத்தி ‘பாகிஸ்தான் ஒழிக’ என்று கூறவைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

  இது தொடர்பாக வடகிழக்கு டெல்லியின் டிசிபி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக தன் ட்விட்டர் பக்கத்தி தெரிவித்துள்ளார்.

  “குற்றம்சாட்டப்பட்டவர் அஜய் கோஸ்வாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பழைய கார்ஹி மெண்டு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மீது காஜுரி காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

  டிசிபி சஞ்சய் குமார் செய்ன் கூறும்போது கோஸ்வாமி வடகிழக்கு டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவன், ஆனால் இப்போதைய சம்பவத்துக்கும் கலவரத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றார்.

  பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் சுமார் 53 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 3 நாள் கலவரத்தில் சொத்துக்கள் பல தீக்கிரையாகின.

  இந்நிலையில் தன் பண்ணையில் திருட வந்தவனையே அடித்ததாக கோஸ்வாமி கூறியதாக போலீஸாரை மேற்கோள் காட்டி ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  பிடிஐ செய்தி அறிக்கையும் அதிகாரிகள் கூறுவதாக கூறும் செய்தியில் கோஸ்வாமியிடம் அடி வாங்கிய நபர் மீது திருட்டு, கொலை குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கிறது.

  இந்நிலையில் கோஸ்வாமி அந்த நபரை அடித்து உதைக்கும் வீடியோவில் ‘இந்துஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் ஒழிக என்று கோஷம்போடு’ என்று கூறுவதாக பதிவாகியுள்ளது.

  ஆங்கிலத் தொலைக்காட்சியின் மின்னணு ஊடகம் ஒன்று கோஸ்வாமி அந்த நபரை அடித்து உதைப்பதை வீடியோ பிடித்த நபர்கள் அசாசுதீன் ஒவைசி ஒழிகன்னு சொல்லு என்று வலியுறுத்தியதாகவும் செய்தி வெளியிட்டது.

  வீடியோ எடுத்தவரையும் அடையாளம் கண்டுப்பிடித்து விட்டதாகவும் அவர் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
  Published by:Muthukumar
  First published: