வருடம் ஆக ஆக வாகனங்களின் எண்ணிக்கையும் வாகன நெரிசலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆனால் மக்களிடையே சாலையில் செல்லும் போது சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாய எண்ணம் மட்டும் எழுவதில்லை. தண்டனைகளும் அபாரதங்களும் அதிகரித்தாலும் அது பெரிய மாற்றத்தைத் தருவதில்லை.
அதன் விளைவாக சாலை விபத்துகள் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே போகிறது. பதிவிடப்பட்ட விபத்துகள் எண்ணிக்கையை அடிப்டையாகக் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், 'இந்தியாவில் சாலை விபத்துகள் -2021' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெருளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:அயோத்தி ஏர்போர்ட்... ராமர் கோயிலின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் கட்டமைப்பு.. AAI தகவல்..
2020 இல் தொடங்கிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகளில் உலாவும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது வரலாற்றில் இல்லாத அளவு சரிவை பதிவு செய்தது. இருப்பினும் சாலை விபத்துகள் முற்றிலும் இல்லை என்று எல்லாம் சொல்லும்படி இல்லை. 57,228 விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டுக்கான தரவுகளை ஒப்பிடும்பொழுது 2021-ல் சாலை விபத்துகள் 8.1 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல காயம் அடைவது 14.8 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. ஆனால் 2019 உடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Analysis Report, Road accident