முதலில் கண்டறிந்தது நாங்களே...! நாசாவின் அறிவிப்பை நிராகரித்த இஸ்ரோ தலைவர் சிவன்

முதலில் கண்டறிந்தது நாங்களே...! நாசாவின் அறிவிப்பை நிராகரித்த இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ சிவன்
  • News18
  • Last Updated: December 4, 2019, 12:09 PM IST
  • Share this:
நிலாவில் நொறுங்கி விழுந்த விக்ரம் லேண்டரை தமிழக இளைஞரின் உதவியுடன் நாசா நேற்று கண்டறிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், செப்டம்பர் மாதமே இதனை கண்டறிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் என்று அழைக்கப்பட்ட லேண்டர், நிலவில் தரையிறங்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்து, நிலவில் மோதி நொறுங்கியது.

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்டது. இஸ்ரோவிற்கு உதவியாக அமெரிக்காவின் நாசாவும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடங்கிய புகைப்படத்தை நாசா நேற்று வெளியிட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியதாக, நாசா தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.


இந்நிலையில் இன்று இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில், இஸ்ரோவின் ஆர்பிட்டரானது, விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. இது பற்றி இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளோம். வேண்டுமானால் நீங்கள் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். செப்டம்பர்-10 ம் தேதி இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...