இன்றைக்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவும் வகையில் அமைகிறது. ஆம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார கட்டணம், கேஸ் விலை உயர்வு போன்றவை மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கிறது. இதை மனதில் வைத்துதான் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் ஓர் அசத்தலான சோலார் அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பெங்களூருவில் இந்தியா எரிசக்கதி வாரம் 2023-ஐ நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில், இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி சமையல் முறையின் இரட்டை அடுப்பு மாதிரியையும் விற்பனையும் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய ஆயில் நிறுவனம், இந்தியாவில் சோலார் குக்கர் மற்றும் ஸ்டவ்கள் உலகிற்கு புதியவை இல்லை என்றாலும், முதல் முறையாக ஒரு உட்புற சோலார் குக்டாப் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் கேஸ் விலை உயர்வால் மக்கள் தற்போது இன்டக்சன் அதாவது எலக்ட்ரிக் அடுப்பு பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் சோலார் அடுப்பை சுமார் 3 கோடி குடும்பங்களை சென்றடைவதற்கு இலக்கு வைத்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More : அலெர்ட்..! ஆதாருடன் உங்கள் பான் கார்டை இணைத்துவிட்டீர்களா..? எளிதாக இணைக்க டிப்ஸ்..
சூரிய அடுப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் : பழைய சோலார் அடுப்புகள் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டுள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ள சோலார் அடுப்பு. இதை நாம் சமையல் அறையில் எளிதாகப் பொருத்திக் கொள்ள முடியும். பார்ப்பதற்கு சாதாரண அடுப்பு போன்றுதான் நமக்கு தெரியும். எனவே எளிதாக நீங்கள் இந்த அடுப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் குறைந்த பட்ச விலை ரூ. 12 ஆயிரம் எனவும், டாப் வேரியண்டின் விலை ரூ.25 ஆயிரம் எனத் தெரிவித்திருந்தாலும் இன்னமும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
சோலார் அடுப்பு வேலை செய்யும் முறை? : சோலார் அடுப்பை வீட்டில் உபயோகிக்க வேண்டும் என்றால் வீட்டிற்கு 2*2 மீட்டர் இடத்துடன் ஓர் இடம் தேவை என்றும் சூர்யா நூதன் அடுப்பை சமையல் அறையில் எளிமையாகப் பொருத்திக் கொள்ளலாம். இந்த அடுப்பில் இரண்டு அலகுகள் உள்ளது. ஒரு யூனிட் சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படுகிறது. இதோடு சூர்ய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் தெர்மல் பேட்டரியும் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் பிரச்சனையின்றி பயன்படுத்தலாம்.
எனவே இனி சிலிண்டர் விலை அதிகரித்துவிட்டதே என்ற கவலையை விட்டுவிடுங்கள். உங்களுக்காகவே இந்த சோலார் அடுப்பு வந்துவிட்டது. நாள் ஒன்றுக்கு சேகரித்து வைக்கும் சூரிய ஆற்றிலின் மூலம் உங்களுக்குத் தேவையான ரொட்டி முதல் சாப்பாடு வரை நீங்கள் செய்து சாப்பிடலாம். நிச்சயம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவே அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Indian Oil