உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர் அமித் குமார் கோரி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்!
பிரியங்கா காந்தி
  • News18
  • Last Updated: February 20, 2019, 8:21 PM IST
  • Share this:
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்திஇந்தநிலையில், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர் அமித் குமார் கோரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டனர்.

அவர்களுடன் ஜோதிராதித்ய சிந்தே, ராஜ் பாபர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர். உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சுரேஷ் ரானாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறினர்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘என்னுடைய அப்பாவுக்கு நடந்ததுதான் உங்களுடைய மகனுக்கு நடைபெற்றுள்ளது. இந்த சோகமான நேரத்தில் நாங்கள், உங்களுடன் இருக்கிறோம். மகன் உயிரிழந்ததால் அவருடைய அப்பா சோகமாக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் மகனை நினைத்து பெருமைப்படவும் செய்கிறார்.உயிரிழந்த வீரரின் குடும்பம் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் மகனுக்காக கொடுத்துள்ளனர். மகன், நாட்டுக்காக உயிரையே கொடுத்துள்ளார். உங்கள் மகனை நாட்டுக்காக அளித்ததற்கு, இந்த ஒட்டுமொத்த நாடும் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது. எங்களுடைய அப்பாவும் இதேபோன்ற ஒரு காரணத்தில்தான் உயிரிழந்தார் என்று என் சகோதரி கூறினார். உங்களுடைய சோகத்தை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.
First published: February 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்