’மக்களின் ஆதரவுக்காக இரவு பகலாக உழைப்போம்’- பிரதமர் மோடி

’இந்தச் சமூகத்துக்கு தன்னிகரில்லா சேவை ஆற்றவும் நாட்டை புதிய உச்சத்துக்கு கூட்டிச்செலவும் தான் பாஜக பிறந்துள்ளது.’

Web Desk | news18
Updated: April 6, 2019, 12:58 PM IST
’மக்களின் ஆதரவுக்காக இரவு பகலாக உழைப்போம்’- பிரதமர் மோடி
மோடி (Image: PTI)
Web Desk | news18
Updated: April 6, 2019, 12:58 PM IST
“இரவு பகல் பாராது உழைப்பதன் மூலம் மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் நம்மால் பெற முடியும்” என பாஜக-வின் 39-வது ஆண்டு விழாவில் தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தச் சமூகத்துக்கு தன்னிகரில்லா சேவை ஆற்றவும் நாட்டை புதிய உச்சத்துக்கு கூட்டிச்செல்லவும் தான் பாஜக பிறந்துள்ளது. அதற்காகத்தான் இந்தியாவின் விரும்பத்தக்க கட்சியாக நாம் உள்ளோம். ஜனநாயக பண்பாடு மற்றும் தேசப்பற்றின் காரணமாக இன்று பாஜக உயர்ந்து நிற்கிறது. நமது வளர்ச்சிப் பணிகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இந்திய மக்களின் ஆசிர்வாதத்தை நாமும் நமது கூட்டணிகளும் பெற தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராது உழைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

39-வது ஆண்டு விழாவில் அமித் ஷா பேசுகையில், “மோடியின் கீழ் புதிய இந்தியாவை உருவாக்க ஓய்வில்லா உழைப்பை தொண்டர்கள் வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் பார்க்க: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...