அமைதியை விரும்புவதால் இந்தியா குறித்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என ராணுவ தளபதி எம்எம் நரவனே கூறியுள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார்.
இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. தேசத்தின் பாதுகாவலர்களாக திகழும் முப்படை வீரர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் டிவிட்டரில் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமது வாழ்த்துகளை டிவிட்டர் மூலமாக பகிர்ந்துள்ளார்.
Also read: ‘
என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!
இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. ராணுவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இந்திய ராணுவ தளபதி எம் எம் நரவனே கூறியதாவது,
அமைதி நிலவ வேண்டுமென்ற இந்தியாவின் விருப்பம் என்பது அதன் வலிமையிலிருந்து பிறந்தது என்றும், எனவே இந்நாடு குறித்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர். எல்லையில் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது. என்கவுன்ட்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லையில் தற்போதுள்ள நிலைமையை தன்னிச்சையாக மாற்ற முயற்சிப்பவர்களை வெற்றி அடைய விட மாட்டோம். நமது பொறுமை தன்னம்பிக்கையின் அடையாளம் ஆகும். ஆனால், இதை சோதித்து பார்க்கும் தவறை யாரும் செய்ய வேண்டாம் என்றார்.
மேலும், இந்திய ராணுவம் சமகால சவால்களை மட்டுமல்லாமல் எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ளும் வண்ணம் தயாராக இருப்பதாகவும், மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே நமது இந்திய ராணுவத்தின் சிப்பாய்களும், அதிகாரிகளும் பணிபுரிந்து வருவதாகவும் தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.
Also read:
ஒரே ரன்வேயில் 2 இந்திய விமானங்கள்.. நூலிழையில் விபரீதம் தவிர்ப்பு - துபாய் விமான நிலையத்தில் திக் திக்..இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.