காங்கிரஸின் ‘ஆண்டனி’யான ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்!

ஆஸ்கர் பெர்னாண்டஸ்

ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மிகவும் விசுவாசமானவராக பெர்னாண்டஸ் அறியப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது, சோனியா காந்தியின் ஆளாகவே பெர்னாண்டஸை நரசிம்ம ராவ் கருதினார்.

 • Share this:
  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ்  இன்று காலமானார். அவருக்கு வயது 80.

  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் , முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராக இருந்தவர்.  1980ல் கர்நாடகாவின் உடுப்பி தொகுதியில் இருந்து முதன்முதலாக  மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் அப்போதைய  மத்திய அமைச்சர் டிஏ பாய் என்பவரை தோற்கடித்து பெர்னாண்டஸ் பெற்ற வெற்றி, இந்திரா காந்தியின் அபிமானத்தை பெற்றுதந்தது.

  பின்னர் 1984, 1989, 1991 மற்றும் 1996 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்கர் பெர்னாண்டஸ் 1998 மற்றும் 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராக ஆஸ்கர் பெர்னாண்டஸ்  பணியாற்றினார்.

  கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த பெர்னாண்டஸ், தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர அரசியலில் இருந்தும் அவர் விலகியே இருந்தார். மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க: பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா, இல்லையா?- பதிலளிக்க மத்திய அரசு மறுப்பு


  அமர், அக்பர், ஆண்டனி

  ராஜீவ் காந்தியின் ஆட்சிகாலத்தில்  அருண்சிங், அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர். அன்றைய காலத்தில் அமிதாப் பச்சன் நடித்து மிகவும் புகழ்பெற்ற திரைப்படமான ’அமர், அக்பர், ஆண்டனி’  தாக்கமாக காங்கிரஸ் கட்சியின் அமராக அருண்சிங்கும், அக்பராக அகமது பட்டேலும் ஆண்டனியாக ஆஸ்கர் பெர்னாண்டஸும் அழைக்கப்பட்டனர்.

  மேலும் படிக்க: மோடி ஆட்சியில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை - ராகுல்காந்தி விமர்சனம்


  இதில் முதல் இருவரும் ஏற்கனவே காலமான நிலையில், ஆண்டனியாக ஆஸ்கர் பெர்னாண்டஸும் தற்போது காலமாகியுள்ளார். காங்கிரஸ் மற்றும்  ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மிகவும் விசுவாசமானவராக பெர்னாண்டஸ் அறியப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது, சோனியா காந்தியின் ஆளாகவே பெர்னாண்டஸை நரசிம்ம ராவ் கருதினார்.  கட்சியின் ரசியங்களை கட்டிப் காப்பதில்  பெர்னாண்டஸுக்கு நிகர் அவரே.  41 ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக அவர் இருந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: