1.5 கிலோ நகைகள்... 90 நாணயங்கள்...! பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றம்

news18
Updated: July 25, 2019, 10:55 AM IST
1.5 கிலோ நகைகள்... 90 நாணயங்கள்...! பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றம்
மாதிரிப்படம்
news18
Updated: July 25, 2019, 10:55 AM IST
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் 90 நாணயங்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது.

மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் வயிற்றுக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், நகைகள் மற்றும் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல்கள், மூக்குத்திகள், கடிகாரங்கள், செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட 1.5 கிலோ ஆபரணங்கள் அகற்றப்பட்டன. மேலும் ரூ.5. ரூ.10 என 90 நாணயங்களும் அகற்றப்பட்டன. மேலும் அவை செம்பு மற்றும் பித்தளையால் ஆன பொருட்களும், தங்கப்பொருட்களும் இருந்தன.


அவருக்கு பல்வேறு முறை மருத்துவ சோதனைகளுக்கு பின்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அப்பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல்கள், மூக்குத்திகள், கடிகாரங்கள், செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட 1.5 கிலோ ஆபரணங்கள் அகற்றப்பட்டன. மேலும் ரூ.5. ரூ.10 என 90 நாணயங்களும் அகற்றப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், ”எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். எனது சகோதரரின் கடையிலிருந்து ஆபரணங்களை எடுத்துள்ளார். கடையில் பொருட்களை காணாமல் போவது குறித்து கேட்டால் உடனே அழத்தொடங்கிவிடுவார்” என்று தெரிவித்தார்.

சில நாட்களாக வயிற்று வலி என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்போதுதான் காணாமல் போன நகைகளை பெண் விழுங்கியது தெரியவந்தது என்றும் கூறியுள்ளார்.

Loading...

First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...