மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் புரியும்படி எழுதவேண்டும் - ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நோயாளிகளுக்கு பரிந்துரை சீட்டில் மருத்துவர்கள் தெளிவாக புரியும்படி, மருந்தின் பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் புரியும்படி எழுதவேண்டும் - ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 14, 2020, 3:04 PM IST
  • Share this:
வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பனிகிரஹி, மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியாதபடி கிறுக்குவதால் நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலீஸ், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 2016 மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியபடி கேப்பிட்டல் லெட்டர் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் மருந்தின் பெயரை எழுத வேண்டும் என்றார்.

Also read... கொரோனா தொற்றாளர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற அம்மா கோவிட் 19 திட்டம் தொடக்கம்...!


இது குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். தெளிவான மருந்தின் பெயரை மருத்துவர்கள் எழுதுவதன்மூலம் தேவையில்லாத பரிசோதனைகள், தவறான மருந்து பயன்பாடு குறையும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading