‘பி.எம் நரேந்திர மோடி’ படத்துக்கு மட்டுமல்ல நமோ டி.விக்கும் தடை பொருந்தும்!

தேர்தல் நேரத்தில் இந்தப்படம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

news18
Updated: April 10, 2019, 5:43 PM IST
‘பி.எம் நரேந்திர மோடி’ படத்துக்கு மட்டுமல்ல நமோ டி.விக்கும் தடை பொருந்தும்!
நமோ டிவி
news18
Updated: April 10, 2019, 5:43 PM IST
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் விவேக் ஓபராய் நடிப்பில் பி.எம் நரேந்திர மோடி என்ற பெயரில் திரைப்படம் தயாரானது.

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் நேரத்தில் இந்தப்படம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் பயோபிக் படமான ‘என்.டி.ஆர்’ படத்துக்கும் தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், கேபிள் சேனல் & டிடிஎச் சேனல்களில் இலவசமாக ஒளிபரப்பாகும் நமோ டிவிக்கும் தடை பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

படத்தின் டிரைலர்...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...