ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு - அமித்ஷா, நட்டாவையும் சந்தித்து பேசினார்!

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு - அமித்ஷா, நட்டாவையும் சந்தித்து பேசினார்!

ஓபிஎஸ் - ஜேபி நட்டா சந்திப்பு

ஓபிஎஸ் - ஜேபி நட்டா சந்திப்பு

அதிமுக இரு அணிகளாக உள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-ன் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவியேற்றார். குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.

ஓபிஎஸ், ஜேபி நட்டா, ஓ.பி.ரவீந்தரநாத்

அதிமுக இரு அணிகளாக உள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-ன் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவின் அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

First published:

Tags: Amit Shah, JP Nadda, OPS, PM Modi