Home /News /national /

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது – பிரதமர் மோடி சாடல்!

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது – பிரதமர் மோடி சாடல்!

பிரதமர் மோடி (கோப்புப் படம்)

பிரதமர் மோடி (கோப்புப் படம்)

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடைய செய்துள்ளன. இதன் காரணமாகத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலைவர்கள் கொல்கத்தாவில் கூடியுள்ளனர் என்றார் மோடி.

  • News18
  • Last Updated :
    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். 

    குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சூரத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலையை இன்று அவர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து சில்வாஸா, தாதர், நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியின்போது 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாகவும், தற்போது தனது ஆட்சியில் ஒன்றே கால் கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணி எனக்கு மட்டும் எதிரானதல்ல, தேசத்துக்கும் எதிரானது. அவர்கள் அனைவரும் கொல்கத்தாவிலிருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிடுகின்றனர்.

    ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடைய செய்துள்ளன. இதன் காரணமாகத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலைவர்கள் கொல்கத்தாவில் இன்று கூடியுள்ளனர். பொதுமக்களின் வரிப் பணத்தை அவர்கள் கொள்ளை அடிப்பதை நான் தடுத்தேன். இதனால், அவர்கள் என் மீது கோபமாக இருப்பது இயல்பானதுதான்.

    அக்கட்சிகளுக்குள் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், அதற்குள் எந்த தலைவருக்கு என்ன பதவி என்று அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார் மோடி.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Kolkata, PM Modi

    அடுத்த செய்தி