• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி!

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி!

புகைப்பட உதவி- பிடிஐ

புகைப்பட உதவி- பிடிஐ

கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட்டவற்றின் விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும்,நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தின

  • Share this:
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    17-ஆவது மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.  கொரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாக விலகாத நிலையில்,  கூட்டத்தொடர் கூடுவதால்,  நாடாளுமன்ற வளாகத்தில் விரிவாக பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களை தலைவர்  பியூஷ் கோயல் உட்பட பலர் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: விடிய விடிய கனமழை- தண்ணீரில் மிதக்கும் மும்பை: 20க்கு மேற்பட்டோர் பலி!


    எதிர்கட்சிகள் சார்பில் காங்கிரஸின்  அதிர் ரஞ்சன் சௌத்திரி, மல்லிகார்ஜுன் கார்கே, திர்ணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த  டெரிக் ஓ ப்ரைன், சுதீப் பாண்டியோபாத்யாய், திமுகவின் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த மிதுன் ரெட்டி மற்றும் விஜய் சாய் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

    Must Read: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்திய இளம்படை- முதற்கட்டமாக 88 பேர் டோக்கியோ சென்றடைந்தனர்!


    இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட்டவற்றின் விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும்,நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தின.  ஐந்து திருத்தங்கள் உட்பட  பல மசோதாக்களையும் சேர்த்து மொத்தம் 29 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட 78% கூடுதல் மழை!


    கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து  பரிந்துரைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.  எவ்வித கூச்சல் குழப்பம் இல்லாமல் அவையை சமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: