ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேசிஆரின் பிரம்மாண்ட பேரணி.. பங்கேற்ற முக்கிய எதிர்கட்சி தலைவர்கள்..

கேசிஆரின் பிரம்மாண்ட பேரணி.. பங்கேற்ற முக்கிய எதிர்கட்சி தலைவர்கள்..

பிஆர்எஸ் மாநாட்டில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர்கள்

பிஆர்எஸ் மாநாட்டில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர்கள்

சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது அது உத்தராயணம். தேசிய அரசியல் தெற்கு நோக்கி நகர்வதால்  அது தட்சிணாயனம் - அகிலேஷ் யாதவ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மிகப்பெரிய பேரணியை நடத்தியுள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் கால்பதிக்கும் நோக்கத்தில் தனது கட்சியின் பெயரை, பாரத் ராஷ்ட்ர சமிதி என்று மாற்றியுள்ளார். இதனையொட்டி தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜகவுக்கு எதிராக ஓர் புதிய அணி உருவாகியிருப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கேரள அரசும் அதன் மக்களும் தெலுங்கானாவுடன் இருப்பதாக கூறினார். ஆங்கிலேயரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர்கள் இன்று பதவிகளில் உள்ளனர் எனவும் நமது தாய்மொழிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு இந்தியை தேசிய மொழியாக சித்தரிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “பாஜக ஆட்சி முடிய இன்னும் 399 நாட்கள் மட்டுமே உள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது அது உத்தராயணம். தேசிய அரசியல் தெற்கு நோக்கி நகர்வதால்  அது தட்சிணாயனம்” என தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தவிர்த்து, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, இடதுசாரிகள் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இதில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Akhilesh Yadav, Chandrasekar rao, DMK, Pinarayi vijayan, TRS