• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு - ராகுல் காந்தி

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஜனநாயகத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் காக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாட்டின் ஜனநாயகத்தை காக்கவும், ஆளும் பாஜகவை வீழ்த்தவும் எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், தேசிய அளவில் ஒத்தகருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ஜனநாயகத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் காக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களை குறித்து பேசவில்லை எனத் தெரிவித்த ராகுல் காந்தி, தற்போதைய நிலை குறித்தும், எதிர்கால நிலை குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: