• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெகாசஸ் விவகாரம்... மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

பெகாசஸ் விவகாரம்... மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மக்களவையில், பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தை தேசியமயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

  • Share this:
    நாடாளுமன்ற மக்களவையில், பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தை தேசியமயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டம் ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே, பெகாசஸ் உளவு விவகாரத்தால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

    பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து

    மக்களவை திங்கட்கிழமை காலை கூடியதும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பெகாசஸ் மென்பொருள் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய சபாநாயகர், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும், அவை சுமூகமாக செயல்பட உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனினும், அமளி தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகளை 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் கூடியபோதும், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதாவை திரும்பப் பெற்று, அதற்கு மாற்றாக புதிய மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்துவைத்தார்.



    அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஒவ்வொரு மசோதாவாக அரசு கொண்டுவருவதாகவும், இதுகுறித்து விவாதம் நடத்த தாங்கள் விரும்புவதாகவும் கூறினார். அதற்கு முன்னதாக பெகாசஸ் விவகாரம் குறித்து முதலில் விவாதம் நடத்தவும் அவர் வலியுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, அமளி நீடித்ததால், 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடியபோது, பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தை தேசியமயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அமளியால் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

    உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மசோதா

    மாநிலங்களவை காலையில் கூடியதும், பி.வி.சிந்துவுக்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். அலுவல்கள் தொடங்கியதும், இருக்கையை விட்டு எழுந்துவந்த உறுப்பினர்கள், வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தியும், பெகாசஸ் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர்.

    Must Read : தமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

    அப்போது, பதாகைகளை காண்பிக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று வெங்கையா எச்சரிக்கை விடுத்தார். உறுப்பினர்கள் ஒத்துழைத்தால், விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தத் தயார் என்று அவர் கூறினார். தொடர்ந்து அமளி நீடித்ததால், 12 மணிவரையும், பின்னர் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபிறகு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அமளியால் அடுத்தடுத்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வேளாண் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி எம்.பி.க்கள் திங்கட்கிழமையும் போராட்டம் நடத்தினர். அப்போது அவைக்கு வந்த பாஜக தலைவர்களுக்கு கோதுமை கதிர்களை பரிசாக வழங்கினர்.

    Read More : வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். பட பாணியில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - இடைத்தரகர் கைது 

    இந்நிலையில், இரு அவைகளையும் சேர்ந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகின்றனர். இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மாதிரி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளதால், இதுகுறித்து விவாதித்து முடிவுசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: