டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை: காங்கிரஸ் அழைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் நன்பகத்தன்மை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: May 30, 2019, 11:03 AM IST
டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை: காங்கிரஸ் அழைப்பு
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: May 30, 2019, 11:03 AM IST
மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளன.

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை டெல்லியில் நாளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. ஜூன் 6-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதால் இந்த கூட்டத்தொடரில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் நன்பகத்தன்மை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also see... ராகுல் காந்திக்காக நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்!

Loading...


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...