காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு அளிப்பது என்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். அதேநேரத்தில் இந்திய ராணுவப் படையின் நடவடிக்கைகளை அரசியலுக்கு பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Strikes Back, Pakistan Army