பதிவாகும் வாக்கை ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட வேண்டும்! எதிர்க் கட்சிகள் வழக்கு

ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல், மே 19-ம் தேதி நிறைவடைகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: March 14, 2019, 7:58 PM IST
பதிவாகும் வாக்கை ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட வேண்டும்! எதிர்க் கட்சிகள் வழக்கு
மாதிரிப்படம்
news18
Updated: March 14, 2019, 7:58 PM IST
வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டையும் ஓப்பீடு செய்யவேண்டும் என்று 21 எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல், மே 19-ம் தேதி நிறைவடைகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்உத்தரப் பிரதேசம், குஜராத், உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இருப்பினும், அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது.

இந்தநிலையில், தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு இயந்திரம் தொடர்பாக காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 21 எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

அந்த மனுவில், ‘50 சதவீதம் அளவுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளையும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Loading...

Also see:

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...