உன்னாவ் விவகாரத்தை கிளப்பி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி!

நாடாளுமன்ற வளாகம் முன்பு சமாஜ்வாதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

news18
Updated: July 30, 2019, 5:16 PM IST
உன்னாவ் விவகாரத்தை கிளப்பி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி!
மக்களவை
news18
Updated: July 30, 2019, 5:16 PM IST
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் புகார் அளித்த பெண் சென்ற கார் மீது லாரி மோதியதில் அவரது தாயும், உறவினரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த பெண்ணும், அவரது வழக்கறிஞரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து நேற்று எம்.எல்.ஏ. குல்தீப் சிங், அவரது சகோதரர் உள்பட 10 மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமென்று உத்தரபிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லக்னோவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதே போல, நாடாளுமன்ற வளாகம் முன்பு சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து மக்களவை கூடியதும் இந்த விவகாரத்தை கிளப்பி பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உன்னாவ் போன்ற சம்பவங்கள் நாட்டு மக்களை வெட்கி தலைகுனிய வைக்கின்றன என குற்றம்சாட்டினார்.

Loading...

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் வந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மக்களவையில் சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உன்னாவ் வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது என்றும் அதனால் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார். இருப்பினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் அமளி நீடித்தது.

Also see...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...