மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்!

Web Desk | news18
Updated: July 30, 2019, 10:14 AM IST
மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்!
மக்களவை
Web Desk | news18
Updated: July 30, 2019, 10:14 AM IST
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவாட் தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருகிறது.

இந்த மசோதாவை மக்களவையில் ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவாட் மக்களவையில் அறிமுகம் செய்தார். நாட்டில் உள்ள 92 சதவிகித அணைகள் மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால் அணை பாதுகாப்புக்கு சட்டம் அவசியமாகிறது என்று அமைச்சர் கூறினார்.


மசோதாவை அறிமுகம் செய்ய , திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக கொறடா ஆ.ராசா வலியுறுத்தினார்.

திமுக போலவே காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மசோதா குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், முல்லைப்பெரியாறு போன்ற அணைகளை பராமரிக்கும் பொறுப்பு, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சென்றுவிடும் என்று பொதுப்பணித் துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் ஆ.வீரப்பன் தெரிவித்துள்ளார்.

Loading...

மேலும் தமிழகத்தின் உரிமை பறிபோய்விடும் என்பதன் காரணமாகவே தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் அணை பாதுகாப்பு மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அணைகளைப் பாதுகாக்கவும் பேரிடர் காலங்களில் இழப்பீடு வழங்கவும் பொதுவான சட்டம் வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதற்கான சட்டத்தை உருவாக்கியது.

கடும் எதிர்ப்புகளால் கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பாஜக அரசு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... மக்களவையில் நிறைவேறியது உபா சட்டத்திருத்த மசோதா!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...