எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

"சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்"

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
சோனியா காந்தி
  • Share this:
நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் பொருளாதார சூழல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் செயல்பாடு, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.


மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை, மாநிலங்களுக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கீடு பற்றியும் விவாதிக்கப்படக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading