சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

சோனியா காந்தி

எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

 • Share this:
  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பின்பேரில் இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜக-வை வீழ்த்தும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

  ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  Must Read : ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

  சோனியா- ஸ்டாலின் சந்திப்பு


  இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், மம்தா பனார்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளான இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக அரசுக்கு எதிராக வியூகங்கள் வகுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
  Published by:Suresh V
  First published: