காஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்!

காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தி.மு.க சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

news18
Updated: August 24, 2019, 3:34 PM IST
காஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்!
ராகுல் காந்தி
news18
Updated: August 24, 2019, 3:34 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பார்வையிடச் சென்ற ராகுல் காந்தி, சரத்யாதவ் உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் ஸ்ரீநகரிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தி.மு.க சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

அதில், 15 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், காஷ்மீருக்கு வந்து பார்வையிட்ட பிறகு, அதுகுறித்து ராகுல் காந்தி பேசவேண்டும் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, நான் காஷ்மீருக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். எப்போது வர வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார்.


இந்தநிலையில், எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு டெல்லியிலிருந்து விமானம் மூலம் காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்றனர். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, தி.மு.க சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி, லோக்டேன்ட்ரிக் ஜனதா தள் சார்பில் சரத்யாதவ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் மஜீத் மேமான், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா உள்ளிட்டவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஸ்ரீநகரில் விமானநிலையத்தில் இறங்கிய அவர்கள் அனைவரும் அங்கேயே திரும்ப அனுப்பப்பட்டனர்.

சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காஷ்மீரில் கடந்த திங்கள் கிழமைதான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

Also see:

Loading...

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...