பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் கூட்டணி அமையும் - சந்திரபாபு நாயுடு

பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் கூட்டணி அமையும் - சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு.
  • News18
  • Last Updated: March 31, 2019, 10:18 AM IST
  • Share this:
பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பணிகள் நாடு முழுவதும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிர்ஸ் கட்சியும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பாஜகவிற்கு எதிராக மெகா கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்திருந்தார். இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் என்று பேசியுள்ளார்.


இதுதொடர்பாக நேற்று நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘‘தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னதிகாரம் படைத்த மத்திய அரசின் அமைப்புகளை பாஜக அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த மாநிலக் கட்சிகள் தேசத்தின் நலனைக் காப்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாநிலக் கட்சிகள் தேசத்தின் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றன. அந்த உணர்வு மதிக்கப்பட வேண்டும். ஆந்திராவின் வளர்ச்சிக்காக நான் எடுக்கும் முயற்சிகளுக்கு பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா மாநிலம் ஆகியவை முட்டுக்கட்டை போடுகின்றன’’ என்று பேசியுள்ளார்.

Also watch

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...