பாஜகவை எதிர்ப்பது ஹிந்துக்களை எதிர்ப்பதாகாது - ஆர். எஸ். எஸ் பொதுச்செயலாளர்

பாஜகவை எதிர்ப்பது ஹிந்துக்களை எதிர்ப்பதாகாது - ஆர். எஸ். எஸ் பொதுச்செயலாளர்
ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி
  • Share this:
தேசிய கட்சியான பாஜகவை எதிர்ப்பது என்பது, ஹிந்துக்களை எதிர்ப்பதாக ஆகாது என்று பேசியுள்ளார் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளரான சுரேஷ் பய்யாஜி ஜோஷி.

விஷ்வகுரு பாரத் என்னும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஹிந்து மக்கள் தனது சொந்த மதத்துக்கு எதிரியாக மாறிவருவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பாஜகவை எதிர்ப்பவர்களை ஹிந்துக்களை எதிர்ப்பவர்களாக நினைக்கக்கூடாது. இது ஒரு அரசியல் முரண். அதை ஹிந்து மதத்துடன் இணைக்கக்கூடாது. ஹிந்து மதமும் பாஜக கட்சியும் ஒன்றல்ல” என்று பதிலளித்துள்ளார்.

”ஆர்.எஸ்.எஸ் அனைவரையும் வரவேற்கிறது. ஹிந்து அல்லாதவர்கள் கூட ஆர்.எஸ்.எஸ்ஸில் இணையலாம். ஹிந்துக்களை மையமாக நாங்கள் இயங்குவது உண்மைதான். கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ சங் சிந்தாந்தத்துடன் இருந்தால், அவர்களும் இணையலாம்” என்று பேசியுள்ளார்.Also See...
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்