ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்கள் நடத்தியது கருத்துக்கணிப்புகள் அல்ல ஓபியம் கணிப்புகள் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு பிறகே உண்மையான நிலவரம் தெரிய வரும் என அரசியல் நோக்கர்களும் கூறியுள்ளனர்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் அண்மையில் வெளியாகின. அதில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்துக்கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஊடகங்கள் நடத்தியது ஒப்பினியன் போல் அல்ல என்றும் அவை ஓபியம் போல்கள் என தெரிவித்துள்ளார்.
எதன் அடிப்படையில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன என்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளதாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதற்காகவே கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுவதாக சாடியுள்ள அகிலேஷ் யாதவ், பணவீக்கம் குறித்தோ, வேலையின்மை குறித்தோ பாஜகவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்புவதில்லை என கூறியுள்ளார்.
Also read: பாஜகவுடன் நண்பர்களாக இருந்தோம் என்பதை நினைக்கும் போது.. வருத்தப்பட்ட சிவசேனா.. பதிலடி கொடுத்த பாஜக!!
அரசு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பொது மக்கள் வருவதில்லை என குறிப்பிட்டுள்ள அகிலேஷ், பாஜக வேட்பாளர்கள் துரத்தி அடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு பிறகே உண்மையான நிலவரம் தெரிய வரும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பஞ்சாபில் பா.ஜ.க 65 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 இடங்களிலும், சம்யுக்த் சிரோமணி அகாலி தளம் 15 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.
உத்தராகண்டில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளதாகவும், மோடி தலைமையிலான ஆட்சியில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதாகவும் கூறினார். மேலும் தாங்கள் உத்தராகண்டில் ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டர்களின் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்றும் கூறினார்.
Also read: சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.