ஹோம் /நியூஸ் /இந்தியா /

காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த 5 தவறுகள்.. உண்மை கதை என்ன? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த 5 தவறுகள்.. உண்மை கதை என்ன? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னரே காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் தனது அரசை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகிறார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Delhi, India

  - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

  ஜம்மு காஷ்மீரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த ஐந்து தவறுகள் என்று அன்மையில் நான் எழுதிய கட்டுரைகள் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. அதில் நான் எழுதிய முக்கிய கருத்து என்பது, 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னரே காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் தனது அரசை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தார். ஆனால் அதை நேரு மறுத்துவிட்டார் என்பதே. இந்த கருத்து நேரு கூறிய கருத்துக்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டதாகும். எனது கட்டுரைக்கு டாக்டர் கரண் சிங் எழுதிய எதிர்வினை கட்டுரை எனக்கு மிகுந்த வருத்ததை தருகிறது.அதில் அவர் நேரு செய்த மீதி நான்கு தவறுகளை முற்றிலும் புறக்கணித்து விட்டார்.

  அவை, இந்தியாவுடனான காஷ்மீர் இணைப்பை தற்காலிகமானது என்று நேரு கூறியது ஒன்று. அடுத்தது, காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை சர்ச்சைக்குரிய நிலங்களைக் கையாளும் சட்டப்பிரிவு 35ன் கீழ் ஐக்கிய நாடுகள் சபையை அணுகியது.மூன்றாவதாக, காஷ்மீரில் ஐ.நா மூலம் பொது வாக்கெடுப்பு என்பது. நான்காவதாக, பிரிவினையை ஏற்படுத்தி 370 சட்டப்பிரிவை உருவாக்கியது.

  இந்த நான்கு புகார்களுக்கும் எதிர்தரப்பில் இருந்து எந்த வித பதில் வரவில்லை. சொல்லப்போனால் இந்தியாவுடன் காஷ்மீரை இனைக்க நேரு தாமதப்படுத்தினார் என்ற உண்மை மறைக்க, தனது வார்த்தை வித்தைகளால் முயற்சித்துள்ளார் டாக்டர் கரண் சிங். ஆனால், நேரு மீது கொண்ட வாழ்நாள் பற்று காரணமாக டாக்டர் கரண் எழுதிய கட்டுரையும், ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்களும் உண்மையை மறைத்து விட முடியாது.காங்கிரஸ் காரர்களுக்கு நேருவை முன்னிலைபடுத்தி இந்தியாவை பின்னுக்கு வைப்பது என்பது மாறாத உண்மை. ஆனால், வரலாற்றின் மாணவர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் உண்மையை திரித்து நேருவை சிறந்தவராக காட்ட முயன்று வருகின்றனர்.

  காஷ்மீர் இணைப்பின் காலம்

  ஜூலை 24, 1952இல் மக்களவையில் நேருவின் உரையில் இருந்தே இந்த உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம். அவர் தனது உரையில், "ஜூலை மாத காலத்தில் காஷ்மீரின் முக்கிய அமைப்பான தேசிய மாநாடு மற்றும் அதன் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்பட்டது.அதேபோல், காஷ்மீர் மகாராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் நாம் அவசரம் காட்ட வேண்டாம். அதுவே முறையானது என இரு தரப்பிடமும் தெரிவித்துள்ளோம்" என்றார்.

  மேலும் இந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின்வருமாறு,

  முதலாவதாக அக்டோபர் 21,1947 - அன்று ஜம்மு காஷ்மீர் பிரதமர் எம்சி மகாஜனுக்கு நேரு எழுதிய கடிதத்தில், "இந்திய ஒன்றியத்தில் காஷ்மீர் இணைப்பு குறித்து எந்த இறுதி முடிவையும் எடுப்பது இந்த நேரத்தில் உரியது அல்ல" என்றுள்ளார். இதற்கு முந்தைய தினமான அக்டோபர் 20ஆம் தேதி தான் பாகிஸ்தான் காஷ்மீது படையெடுக்கத் தொடங்கியது. அப்படி இருக்க நேரு தாமதப்படுத்தியுள்ளார்.

  இரண்டாவது, நவம்பர் 25, 1947 நாடாளுமன்ற உரையில் நேரு, "நாங்கள் காஷ்மீர் இணைப்பை மேல் எழுந்த வாரியாக செய்யாமல், மக்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டு செய்ய விரும்புகிறோம். எனவே, வேகமான முடிவுகள் எடுப்பதை ஊக்குவிக்க விருப்பமில்லை" என்றுள்ளார்.

  மூன்றாவது, அன்றைய காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய கிருபாலினி 1947ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் சென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் காஷ்மீர் இணைப்பை விரும்புகிறார். அப்படி இருக்க, தேசிய மாநாடு காஷ்மீரை விட்டு ஹரி சிங்கை வெளியேற சொல்வது முறையற்றது. காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் என்ற கோஷத்தை தேசிய மாநாடு கைவிட வேண்டும் என ஹரி சிங் கோரிக்கை வைக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்படி இருக்க "காஷ்மீர் வெளியேற்றம்" முழக்கத்தை முன்னெடுத்த ஷேக் அப்பதுல்லாவுக்கு நேரு ஆதரவாக செயல்பட்டார்.1947ஆம் ஆண்டில் இந்தியாவில் காஷ்மீரை இணைக்க ஹரி சிங் பல முறை வலியுறுத்தியும் நேரு அதை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டார்.

  நான்காவதாக, மவுன்ட்பேட்டன் பிரபு 1947 ஜூன் மாதத்தில் காஷ்மீர் செல்வதாக இருந்தார். அப்போதே நேருவுக்கு ராஜா ஹரி சிங் தேவை என்ன என்பது தெரிந்திருந்தது. " காஷ்மீரை இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்க வேண்டும் என்பதே அடுத்த நகர்வு. இதை செய்வதன் மூலம் பொதுமக்களின் தேவை மற்றும் மகாராஜாவின் விருபத்தை நிறைவேற்ற முடியும்" என நேரு எழுதியுள்ளார். எனவே 1947 ஜூன் மாதத்திலேயே ஹரி சிங் என்ன விரும்பினார் என நேருவுக்கு தெரிந்திருந்தது. இருப்பினும் தனது சொந்த நோக்கத்திற்காக நேருவே இதற்கு தடையாக இருந்தார்.

  ஐந்தாவது, ஜூலை 1947, செப்டம்பர் 1947இல் ஹரி சிங் இந்தியவுடன் இணைப்பிற்கான முயற்சியை மேற்கொண்டார். இதெல்லாம் பாகிஸ்தான் படையெடுப்பதற்கு முன்னரே. அதற்கு நேரு தடையாக இருந்தார். இதை காஷ்மீர் பிரதமர் தனது சுயசரிதையில் குறிபிட்டுள்ளார். "மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைப்பை உடனடியாக விரும்பினார். நிர்வாக ரீதியான சீர்திருத்தங்களை பின்னர் மேற்கொள்ளலாம் என அவர் கூறினார். ஆனால், நேருவோ காஷ்மீர் உள்துறை நிர்வாக மாற்றத்தை நேரு தான் உடனடியாக செய்ய வேண்டும் என்றார்." என மஹாஜன் கூறுகிறார்.இந்த தரவுகள் மூலம் பல முறை காஷ்மீர் இணைப்புக்கான முயற்சியை தனது சொந்த நோக்கத்திற்காக நேரு தடுத்தது உறுதியாகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jammu and Kashmir, Jawaharlal Nehru