Home /News /national /

மானியங்கள் பயனாளர்களை முறையாக சென்று சேர்கிறதா.. இந்திய ஏழைகளின் தேவை என்ன?

மானியங்கள் பயனாளர்களை முறையாக சென்று சேர்கிறதா.. இந்திய ஏழைகளின் தேவை என்ன?

மானியத்திட்டங்கள் பயனாளர்களுக்கு முறையாக செல்கிறதா

மானியத்திட்டங்கள் பயனாளர்களுக்கு முறையாக செல்கிறதா

நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், பொது விநியோக திட்டத்தில் தான் 40-50 சதவீத திருட்டு நடைபெறுகின்றன  எனக் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
    ஏ.எஸ்.மிட்டல்

    ஐக்கிய நாடுகள் சபை அன்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2023ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை நாடாக சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது பல்வேறு கோணங்களில் இந்தியாவுக்கு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமான சாவல் என்பது ஏழை எளியோருக்கு வழங்கப்படும் மானியம்.

    சொல்லப்போனால் உலகிலேயே அதிக மானியம் பெறும் விதமாக 80 கோடி பயனாளர்கள் கொண்ட ஒரே நாடு இந்தியா தான். கடினமான பொருளாதார சூழலில் இந்தியாவின் வளர்ச்சியையும், அதிக செலவுகளை தரும் மானியத்தையும் ஒருங்கே கொண்டு செல்வது கடினம். உணவு, வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளில் நாம் செலவழிக்கும் மானியத்தை குறைத்து சேமித்து வைத்தால் அதை கல்வி, சுகாதாரம் போன்ற மற்ற அடிப்படை அம்சங்களில் நாம் செலவிடலாம்

    மானிய செலவுகள் அதிகரிப்பு

    இந்தியா கடந்த நிதியாண்டில் ரூ.27.07 லட்சம் கோடி வரி வசூல் வைத்திருந்த நிலையில், 2021-22 நிதியாண்டில் மானியத்திற்காக மட்டும் மத்திய மாநில அரசுகள் ரூ.8.86 லட்சம் கோடி செலவிட்டுள்ளன. 2019-20 ஆண்டு இந்த தொகை ரூ.5.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இது வெகுவாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த வரி வருவாயில் 33 சதவீதமும், ஜிடிபியில் 6 சதவீதமும் மானியத்திற்காக செலவிடப்படுகின்றன. இதுவொரு கணிசமாக தொகையாகும்.

    2019-2020 ஆண்டு காலகட்டத்தில் 3 சதவீத வளர்ச்சியில் இருந்த மானிய செலவுகள், 2021-22இல் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 70 சதவீத பயனாளர்களின் தனி நபர் மானிய செலவும் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் உணவு மானியம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 2019-2020 ஆண்டு காலத்தில் ரூ.1.09 லட்சம் கோடியாக இருந்த உணவு மானியம் 2021-22இல் ரூ.2.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: இலவச அரிசியில் ஆரம்பித்து நிலவுக்கு சுற்றுப் பயணம் வரை.. அரசியல் கட்சிகளும் அதன் வாக்குறுதிகளும்!

    அதேபோல், இதேகாலகட்டத்தில் உர மானியம் ரூ.81,000 கோடியில் இருந்து ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமரின் கரிப் கல்யான் யோஜ்னா திட்டத்தின் மானியமும் இந்த காலகட்டத்தில் ரூ.6,033 கோடியில் இருந்து ரூ.8,456 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் ஏற்படும் பிரச்னைகள்

    மானிய செலவுகளில் சீர்திருத்தமும்,மானிய உதவித்தொகைகளை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் DBT முறையை ஊக்குவிப்பதிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த DBT முறை மூலம் போலிகள், மோசடிகள் தவிர்க்கப்பட்டு தேவையானோருக்கு உதவிகள் முறையாக செல்கின்றன. இந்த DBT முறை 2013ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து ரூ.2.50 லட்சம் கோடி சேமிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் அரசு இயந்திரங்களில் உள்ள பல்வேறு சிக்கலான கட்டமைப்பு காரணமாக மானியங்கள் தற்போதும் மக்கள் மத்தியில் முழுமையாக சென்று சேர்வதில்லை. எனவே, மக்கள் வரிப்பணம் மூலம் செலவிடப்படும் இந்த மானியங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், பொது விநியோக திட்டத்தில் தான் 40-50 சதவீத திருட்டு நடைபெறுகின்றன  எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, பொது விநியோக திட்டதில் DBT முறையை பயன்படுத்துவதன் மூலம் இந்த மோசடியை தவிர்க்கலாம். கடந்த 60 ஆண்டுகளாக அரசு தரும் மானியம், சலுகைகள் மூலம் 86.2 சதவீத சிறு குறு விவசாயிகள் வாழ்வு மேம்பட்டதாக தெரியவில்லை. மிக முக்கியமாக யார் விவசாயிகள் என்பதற்கே தெளிவான வரையறை இல்லை. விவசாயிகளின் உள்ளீட்டு செலவுக்கு மானியம் வழங்கப்படும் போதும் அவர்கள் வருவாய் ஏன் இவ்வளவு குறைவாக இருந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுவது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும்.

    இதில் அவல நிலை என்னவென்றால், விவசாயத்திற்காக வழங்கப்படும் பெரும்பாலான மானியம் விவசாய செயல்பாடுகளுக்கு பயன்படுவதில்லை என்பது தான். உதாரணமாக பஞ்சாப்பில் ஆண்டுதோறும் ரூ.7,000 கோடி வேளாண் இலவச மின்சார திட்டத்திற்காக மானியமாக வழங்கப்படுகிறது.அங்கு பயன்படுத்தப்படும் 15 லட்சம் டியூப்வெல்களுக்கு மீட்டர் கணக்கீடு முறையே இல்லை. இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுகின்றன. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வரை ஏழைகளின் இலவச மானியத் திட்டத்தை அத்துமீறி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

    இதையும் படிங்க: மூன்று செயலிகளை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 12 வயது சிறுவன்

    இலவச மின்சாரம், உரம் போன்றவற்றை தேவையின்றி அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் தன்மையும் உள்ளது. இந்தியாவில் 1.5 சதவீத நிலப்பரப்பை கொண்டுள்ள பஞ்சாப் தான் நாட்டின் 23 சதவீத பூச்சிமருத்து பயன்பாட்டை கொண்டுள்ளது. 1970ஆண்டு பெற்ற மகசூலை பெற அப்போது பயன்படுத்தியதை விட 3.5 மடங்கு அதிகம் பூச்சிக்கொல்லியை பஞ்சாப் பயன்படுத்துகிறது.

    இதற்கு தீர்வு தான் என்ன

    இந்த இலவச மின்சாரம், உரம் ஆகியவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க முறையான அமைப்பு தேவை. வேளாண் கடன் முறையே பயனாளர்களுக்கு சென்று சேர்ந்து பயன்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.உன்மையான பயனாளர்கள் யார் என்பதை அரசு முறையாக கணக்கெடுதத்து போலிகளை களைய வேண்டும்.ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மானிய செலவுகளை முறையாக பயன்படுத்தி மிச்சமுள்ளவற்றை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்த வேண்டும்.அதேபோல் மானியம் என்பதை ஒருவர் மேம்படும் வரை வழங்கப்படும் தற்காலிக தேவை என்பதை உணர்த்த வேண்டும். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த சூழலில் இன்னும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளில் நாம் பின்தங்கியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் பல்நோக்கி மருத்துவமனை, அனைத்து வட்டங்களிலும் ஆரம்ப சுகாராத நிலையங்கள், அனைத்து ஏழை எளியோருக்கும் இலவச காப்பீடு, சுகாதார சேவை போன்றவற்றை உறுதி செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    நாட்டின் வேலையின்மை, வறுமை ஆகியவற்றை போக்க கல்வி, திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். இளையோருக்கு தரமான கல்வி மற்றும் திறனை வழங்குவதன் மூலம் அவர்களின் பெற்றோரை விட திறன்பெற்ற மேம்பட்ட வாழ்வு பெறும் தலைமுறையாக நாம் மாற்ற வேண்டும்.மானியத்தில் உள்ள மோசடிகளை களைந்து அதில் சேமிக்கும் தொகையை கல்வி, வேலைவாய்ப்பில் செலவிடுவதே நாட்டின் 75 சுதந்திர தின கொண்டாட்டத்தை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

    பொறுப்பு துறப்பு:  இந்த கட்டுரையை எழுதியவர் சோனாலிக்கா குழுமத்தின் துணை தலைவர் ஏ.எஸ்.மிட்டல். இவர் பஞ்சாப் திட்ட குழுவின் முன்னாள் துணை தலைவராகவும், அசோச்சம் அமைப்பின் வடக்கு பிராந்திய தலைவராகவும் இருந்தவராவார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Free Rice, Subsidy

    அடுத்த செய்தி