Home /News /national /

இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து பின்னுக்கு தள்ளும் 'இலவச திட்ட' கலாசாரம்

இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து பின்னுக்கு தள்ளும் 'இலவச திட்ட' கலாசாரம்

இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் இலவச திட்ட கலாசாரம் - கவுதம் சென்

இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் இலவச திட்ட கலாசாரம் - கவுதம் சென்

இலவச, சலுகை கலாச்சாரம் என்பது பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்களின் நிதிநிலையை மிகவும் மோசமாக்கி திவாலாகும் சூழலை உருவாக்கியுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Delhi, India
  கவுதம் சென்

  இந்தியாவில் இலவச திட்டங்கள் அது தொடர்பான வாக்குறுதிகள் என்பது புதிதல்ல. ஆனால், ஆம் ஆத்மி இந்த இலவச வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கும் விதமாக ஆசை காட்சி ஆட்சியை பிடிக்கும் யுக்தி டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அக்கட்சி சிறந்த பலன்களை தந்துள்ளது. இந்த இலவச வாக்குறுதி விவகாரம் நீதிமன்றத்தில் வந்து நின்றாலும் இதற்கு தீர்வு காணும் வழி மற்றும் பொறுப்பு நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் கைகளில் தான் உள்ளது. இந்த சிக்கலான விவகாரத்தை அரசே கையில் எடுக்க தயங்கும் நிலையில், அதன் பொறுப்பை தேர்தல் ஆணையத்தின் வசம் ஒப்படைத்துள்ளது. இலவசம் என்பது நிதி நிலை சார்ந்த தேர்தல் வெற்றி சூத்திரம் என்று இல்லாமல் அது தற்போது இந்திய அரசியல் நடைமுறையில் மையப் புள்ளியாகவே மாறியுள்ளது. சொல்லப்போனால் இந்த இலவச திட்டங்களுக்கு வரலாற்று ரீதியாகவே அரசியல் மற்றும் பொருளாதார கோணங்கள் உள்ளன.

  முதல் நூற்றாண்டு ரோம பேரரசின் மன்னனான நீரோ, ரோமாபுரி நகரில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட போது அம்மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்குவதாக் கூறி அவன் திருடி பதுக்கி வைத்திருந்த தானியங்களில் சிறு பங்கை மக்களுக்கு வழங்கினான். இலவசம் என்பதில் வழங்கும் நபரும் மிக சிறந்த பலன்களை அடைகிறார்கள் என்பதே எதார்த்தம். யாருடைய பணத்தில் இருந்து இந்த அனைத்து இலவச திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன என்பதே இதன் மையக் கேள்வி.

  இலவச திட்டங்கள் என்பது முழுமையாக விலையின்றி ஒரு பொருளையோ சேவையையோ வழங்குவது மட்டுமல்ல. உண்மையான பயனாளர்களாக இல்லாத மிகப் பெரும்பான்மை மக்களுக்கு மானியம் என்ற பெயரில் வழங்கும் பல சலுகைகள், உதாரணமாக சலுகை விலையில் பேருந்து சேவை, மின்சாரம், குடிநீர், உர மானியம் போன்றவை நீண்ட கால சூழலுக்கு பெரும் நிதிச்சுமையை கொண்டு வந்து சேர்க்கும்.

  இந்த இலவச, சலுகை கலாச்சாரம் என்பது பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்களின் நிதிநிலையை மிகவும் மோசமாக்கி திவாலாகும் சூழலை உருவாக்கியுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பஞ்சாப் மின்சார வாரியத்தின் நிலைதான். அம்மாநிலத்தில் இலவச, மானிய விலை மின்திட்டங்களுக்கு , அம்மாநிலத்தின் மொத்த வருவாயில் 16 சதவீதம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  அரசு செலவீனத்தில் இவ்வாறு மிக கணிசமான தொகை செல்வது நீண்ட கால நலனுக்கு உகந்தது அல்ல. அதேவேளை, பஞ்சாப்பில் தொழில் துறையினருக்கு மின்சார கட்டனம் குஜராத் போன்ற மாநிலங்களை ஒப்பிடும் போது மிக அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியங்கள் தங்களின் மானிய கொள்கைகளால் கடும் நிதிச்சுமையில் உள்ளன.

  இந்த இலவசம் மற்றும் மானிய திட்டங்களால் நடப்பு நுகர்வு மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கான மூலதன முதலீடு கடும் பாதிப்பை சந்திக்கின்றது. சீனா போன்ற அண்டை நாடுகள் அளிக்கும் சவாலான சூழலில் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவு இலக்கை நோக்கி செல்வது கடினமாகிவிடும்.

  இதையும் படிங்க: மானியங்கள் பயனாளர்களை முறையாக சென்று சேர்கிறதா.. இந்திய ஏழைகளின் தேவை என்ன?

  இந்த இலவச, சமூக நல திட்டம் என்பது உலக நாடுகள் அனைத்திலும் உள்ளன. பிரிட்டன் நாட்டில் சுகாதார சேவைகள், வேலையில்லாதோருக்கு உதவித்தொகை போன்ற சமூக நலத் திட்டங்கள் உள்ளன. இதேபோல் பல திட்டங்கள் வளர்ந்த நாடுகளில் உள்ளன. ஆனால், இந்த திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து திரட்டுவது எதை தியாகம் செய்து அதற்கு மாற்றாக எதை வழங்குவது என்பதில் தான் பிரச்சனை உள்ளது. பாதுகாப்பு துறைக்கு இவ்வளவு நிதி தேவையா என்ற கேள்விகள் தர்க்கத்திற்கு முன்வைத்தாலும், சர்வதேச கள யதார்த்தத்தில் இது தவிர்க முடியாத ஒன்றாகும்.

  எனவே, 300 யூனிட் இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் மக்களுக்கு நீண்ட கால நலனை பாதிக்கும் என்பதுடன் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தும் ஆபத்தான யுக்திகளை வெற்றி பெற செய்துவிடும். இந்த தவறான முன்னுதாரணத்தை மற்றவர்களும் தேர்தல் வெற்றி சூத்திரமாக பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு. எனவே, ஊழல் தவறுகளால் பாழ்பட்டு உள்ள இந்திய அரசியல் சூழலில் மக்களின் நம்பிக்கையை பெற அரசியல்வாதிகள் ஆக்கப்பூர்வமான உரையாடலை கொண்டுவர வேண்டும். தற்காலிக பயன்களை தரும் இலவசம், மானியம் என்பதை தாண்டி அவர்களை நீண்ட கால தேவையை நோக்கி சிந்திக்க ஊக்குவிக்க வேண்டும். குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி மானியம், மின் திருட்டு போன்ற முறைகளை கைவிட்டு 24 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என்று வாக்குறுதி வழங்கினார். அதை மக்களும் ஏற்று தொடர் வெற்றியை தந்தனர். இந்த குஜராத் வாக்காளர்கள் தான் ஆம் ஆத்மியின் இலவச வாக்குறுதியை சமீபத்திய தேர்தலில் நிராகரித்தனர்.

  எனவே, ஆக்கப்பூர்வ வளர்ச்சி கண்ட ஸ்கேன்டினேவியன் நாடுகளை போல் இந்தியாவும் நீண்ட கால வளர்ச்சி என்ற பாதையில் பயணித்து விரைவில் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவு இலக்கை எட்ட வேண்டும்.

  பொறுப்பு துறப்பு - இந்த கட்டுரை கவுதம் சென் என்ற பொருளாதார நிபுணர் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இவர் 20 ஆண்டுகளாக லன்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்து
  Published by:Kannan V
  First published:

  Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal

  அடுத்த செய்தி