பொதுவெளியில் விவசாயத் தலைவர்களுடன் விவாதிக்க மத்திய அரசு தயாரா? - அரவிந்த் கெஜ்ரிவால் சவால்..

பொதுவெளியில் விவசாயத் தலைவர்களுடன் விவாதிக்க மத்திய அரசு தயாரா? - அரவிந்த் கெஜ்ரிவால் சவால்..

அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது என்கிறது, விவாதம் நடந்தால் யாருக்கு அதிகம் தெரியும் என்பது நிருபணமாகிவிடும். விவாதத்துக்கு தயாரா என சவால் விடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

 • Share this:
  வேளாண் சட்டங்கள் குறித்து அதிகமாக தெரியும் என்று கூறும் மத்திய அரசு, பொதுவெளியில் விவசாயத் தலைவர்களுடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருக்கிறதா என கேள்வி எழுப்பியிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது என்கிறது, விவாதம் நடந்தால் யாருக்கு அதிகம் தெரியும் என்பது நிருபணமாகிவிடும். விவாதத்துக்கு தயாரா என சவால் விடுத்துள்ளார்.

  புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த வேண்டுகோளில், விவசாயிகள் வாழ்வாதாரத்துக்காக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவித்தார். கடந்த வாரம் நவம்பர் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு எல்லைக்கு இரண்டாவது முறையாக வருகை தந்த கெஜ்ரிவால், "எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் விவசாயிகளுடன் வெளிப்படையான விவாதம் நடத்துவதற்கு நான் சவால் விடுகிறேன், வேளாண் சட்டங்கள் எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பது யாருக்கு தெரியும் என்பது நிரூபணமாகிவிடும்” என பேசினார்.

  "விவசாயிகள் தங்களின் வாழ்க்கைக்காக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடமிருந்து பறித்துவிடும். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு கூப்பிய கரங்களுடன் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், டெல்லி துணை முதல்வரான மனீஷ் சிசோடியா, "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நீங்கள் (விவசாயிகள்) தாங்கிக்கொள்ளும் வலியைக் குறைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்று கூறினார்.

  மேலும் படிக்க'மது குடிக்கவேண்டாம், வீட்டுக்குள் இருங்கள்’ - வட இந்தியர்களை எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.. காரணம் என்ன?

  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக, கெஜ்ரிவாலும், அவரது ஆம் ஆத்மி கட்சியும் உறுதியாக முன்வந்துள்ளன. சிங்கு பகுதி மட்டுமின்றி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைப் புள்ளிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Gunavathy
  First published: