காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூடப்பாக்கம் சேகர் ரெட்டியார் முதலாம் ஆண்டு நினைவு தினம் பத்துகண்ணில் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, உள்ளிட்ட கட்சியின் மாநில வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேகர்ரெட்டியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் நாராயணசாமி பேசுகையில், மறைந்த சேகர் ரெட்டியார் காங்கிரஸ் கட்சியின் மீதும் சோனியா காந்தியின் மீதும் வைத்திருந்த பற்றின் காரணமாக அவருக்கு பல்வேறு பதவிகள் வழங்கி காங்கிரஸ் அழகு பார்த்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவரது உழைப்பு போற்றுதலுக்குரியது. காங்கிரஸில் 100 பேர் மட்டுமே இருந்தாலும் நான் சாகும் வரை காங்கிரஸில் இருப்பேன் என்றார்.
கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது 4 ஆண்டுகள் பத்து மாதம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு பலர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் எல்லாம் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய 3 மந்திரங்களை கையில் வைத்து ஆட்டிப் படைத்து வருகிறார். முதுகில் அழுக்கு உள்ளவன்தான் மோடிக்கு பயப்படுவார்கள் என ஆவேசமாக கூறிய நாராயணசாமி, தற்போது நடக்கும் என்.ஆர்- பாஜக கூட்டணி ஆட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
செவிலியர் கையிலிருந்து தவறி விழுந்த பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
தேர்தல் வாக்குறுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவும், நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம், மாநில அரசின் கடன் தள்ளுபடி மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதிக்கு வழங்குவோம் என்று அறிவித்தார்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை வழங்கவில்லை. புதுச்சேரியில் தற்போது முதல்வர் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். உண்மையிலேயே புதுச்சேரியை ஆளுவது கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தான் என்றும் தெரிவித்தார்.
தற்போது அமித்ஷா புதுச்சேரி வரும்பொழுது எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டது. அதில் இந்தி மொழியில் அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. புதுச்சேரி மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். புதுச்சேரி வந்த அமித்ஷா எந்த ஒரு புதிய திட்டம் ஏதாவது அறிவித்தாரா?. கடந்த ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தூசு தட்டி எடுத்து நிறைவேற்றி வருகிறார்கள். அரும்பார்த்தபுரம் சாலையாக இருக்கட்டும், ஸ்மார்ட் சிட்டி பணிகளாக இருக்கட்டும் எங்களுடைய ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டது. அதனை இப்போது செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்திலும், சட்ட ஒழுங்கிலும் முதலிடத்தில் இருந்தது.
பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
மோடி பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம் என்று சொன்னார். ஆனால் புதுச்சேரியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா புழக்கம் தான் அதிகமாக உள்ளது. புதுச்சேரி ஆன்மிக பூமியாக தான் உள்ளது. இதனை மோடி வந்து ஆன்மிக பூமியாக மாற்ற தேவையில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Narayanasamy, Puducherry