’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் - ஹிமாச்சல பிரதேச முதல்வர்

’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் - ஹிமாச்சல பிரதேச முதல்வர்

ஜெய்ராம் தாக்கூர், ஹிமாச்சல் முதல்வர்

 • Share this:
  ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் என ஜெய்ராம் தாக்கூர் ஹிமாச்சல பிரதேச முதல்வர் பேசியிருக்கிறார்.

  டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறிஉள்ளது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் கர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 11 காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஹிமாச்சல் ஜெய்ராம் தாக்கூர், “பாரத் மாதா கி ஜெய் சொல்பவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம். பாரதத்தை எதிர்ப்பவர்கள், அரசியல் சாசனத்தை அவமதிப்பவர்கள் ஆகியவர்களை சமாளிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

  Also See...
  Published by:Gunavathy
  First published: