Home /News /national /

ஆண்- பெண் இடையேயான திருமணத்துக்கு மட்டுமே அங்கீகாரம்: மத்திய அரசு

ஆண்- பெண் இடையேயான திருமணத்துக்கு மட்டுமே அங்கீகாரம்: மத்திய அரசு

'துணை' என்பது கணவன் மற்றும் மனைவி; 'திருமணம்' என்பது பாலின உறவுகளுடன் தொடர்புடைய ஒரு சொல் என்று குறிப்பிட்ட துஷர் மேத்தா, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று கூறினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆண்- பெண் இடையேயான திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

    ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசீட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, 'துணை' என்பது கணவன் மற்றும் மனைவி; 'திருமணம்' என்பது பாலின உறவுகளுடன் தொடர்புடைய ஒரு சொல். எனவே, குடியுரிமை சட்டம் தொடர்பாக குறிப்பிட்ட பதிலை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமணத்தை மட்டுமே சட்டம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

    மனுதாரர்களில் ஒருவருக்காக வாதாடிய வழக்கறிஞர், இந்து திருமணம் சட்டம் என்பது எந்த இரு இந்துக்களுக்கு இடையேயும் திருமணம் நடைபெறலாம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. இந்து திருமணச் சட்டம், ஓரினச்சேர்க்கையை வேறுபடுத்தவில்லை என்று வாதிட்டார்.

    இதையும் படிங்க: தீபாவளி: தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!

    இதேபோல் மற்றொரு மனுதாரர், சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டம் ஆகிய இரண்டு வெவ்வேறு குடிமை சட்டங்களின் கீழ் அவர்களது திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரினர்.

    இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களின் இறுதிக்கட்ட விசாரணையையும் நவம்பர் 30ம் தேதிக்கு டெல்லி  உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

    மேலும் படிக்க: பிஜி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங், நீதிமன்ற தீர்ப்பு வரை நிறுத்தி வைக்கப்படும் : மத்திய அரசு உறுதி

    Published by:Murugesh M
    First published:

    Tags: Delhi High Court, Same-sex Marriage

    அடுத்த செய்தி