“தொழில்துறை வளர்ச்சியை மந்தமாக்கிவிட்டார்.. தாடியை மட்டும் தான் வளர்க்கிறார்..!”: பிரதமர் மோடி மீது மம்தா கடும் தாக்கு!

பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி தாடியை மட்டும் தான் வளர்ப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • Share this:
மேற்குவங்கத்தின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க இருக்கும் நிலையில் அம்மாநில தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக தலைவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லாததால் மம்தா பானர்ஜி vs பிரதமர் மோடி - அமித்ஷா என்ற அளவில் அங்கு வார்த்தை மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக (சிண்டிகேட்) செயல்பட்டுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறியதற்கு பதிலடி தரும் வகையில் இன்று அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜியில் தேர்தல் பரப்புரை அமைந்தது.

அவர்களிடம் (பாஜக) இரண்டு சிண்டிகேட் உள்ளது. ஒருவர் கலகக்காரர். டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேச மாநிலங்களில் கலவரங்களை ஏற்படுத்தியவர். மற்றொருவர் தொழில்துறை வளர்ச்சியை மந்தப்படுத்திவிட்டார், ஆனால் தனது தாடியை மட்டும் தான் வளர்த்த்க்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் அவர் மகாத்மா காந்திக்கும், ரவீந்திர நாத் தாகூருக்கும் மேல் தன்னை வைத்துக் கொள்கிறார். சில நேரங்களில் தன்னை சுவாமி விவேகானந்தர் என்றே அழைத்துக் கொள்கிறார். ஸ்டேடியத்திற்கு தனது பெயரை சூட்டிக்கொள்கிறார். சில நேரங்களில் அவர்கள் தலையில் ஏதோ தவறு ஏற்படுகிறது. ஒரு நட் லூசாக இருக்கும் என நினைக்கிறேன்.” இவ்வாறு மம்தா பானர்ஜி கடுமையாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சாடினார்.

மம்தா பானர்ஜி


கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி அவரின் புகைப்படங்களை பிரசுரித்துக் கொள்கிறார். ஒரு நாள் இந்தியாவின் பெயரையும் மாற்றி அவருடைய பெயரை வைத்தாலும் வைத்து விடுவார் என்று சில நாட்களுக்கு முன்னர் மம்தா பேசியிருந்தார்.

நாளை (மார்ச் 27) முதல் மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு முறை தொடர்ந்து முதல்வராக இருந்து வரும் மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார். அதே நேரத்தில் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான விடை மே 3ம் தேதி கிடைக்கும்.
Published by:Arun
First published: