ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆண்களே அதிகம்.. செல்போனில் பின்தங்கும் பெண்கள்.. இது டிஜிட்டலின் பாலின சமத்துவமின்மை!

ஆண்களே அதிகம்.. செல்போனில் பின்தங்கும் பெண்கள்.. இது டிஜிட்டலின் பாலின சமத்துவமின்மை!

பெண்கள் போன் பயன்பாடு

பெண்கள் போன் பயன்பாடு

பொதுவாக பெண்களிடம் இருக்கும் கைபேசிகள், ஆண்களால் பயன்படுத்தம் போன்களை போல அதிநவீனமான இருப்பதில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

இந்தியாவில் 32 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே மொபைல் போன் வைத்துள்ளனர். அதே சமயம் ஆண்களை பொறுத்தவரை 60 சதவீதம் பேர் போன் பயன்படுத்துகின்றனர் என்று ஆக்ஸ்பாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான டிஜிட்டல் பிளவை ஆழப்படுத்துவதில் பாலின சமத்துவமின்மை வகிக்கும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்ட 2021 ஆம் ஆண்டின் இறுதி வரையிலான தரவைக் கொண்டு 'இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022: டிஜிட்டல் பிளவு' என்ற அறிக்கையை ஆக்ஸ்பாம் நிறுவனம் தயாரித்தது.

நம் வீசுகளிலேயே இதை பார்த்திருப்போம். அப்பா, மகன் , மகள் எல்லோரு இன்றைய லேட்டஸ்ட் மாடல் போன்கள் வைத்திருப்பர். அம்மக்கள் மட்டும் பழைய பட்டன் டைப் போன் வைத்திருப்பார். மற்றவர்கள் புது போன் வாங்கினால் மட்டுமே அது  கைமாறும். இந்த நிலையைத் தான் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:25 மசோதாக்கள் ப்ளான்.. இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

பொதுவாக பெண்களிடம் இருக்கும் கைபேசிகள், ஆண்களால் பயன்படுத்தம் போன்களை போல அதிநவீனமான இருப்பதில்லை. தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பயன்படுத்து குறைந்த தொழில்நுட்ப சேவைகள் உள்ள போன்களே  அதிகம் பயன்படுத்துகின்றனர் இணைய பயன்பாடும் ஒப்பீட்டளவில் குறைவு என்று அறிக்கை கூறுகிறது.

ஒப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் தரவை மேற்கோள் காட்டி, ஆக்ஸ்பாம் அறிக்கை, இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பெண்களாக இருப்பதால், உலகின் பாலின டிஜிட்டல் பிரிவின் பாதிப் பங்கை இந்தியா கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளது

டிஜிட்டல் சாதனத்தை சொந்தமாக வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது மனிதனால் தீர்மானிக்கப்படும் தனிப்பட்ட முடிவு. ஆனால் அதில் பாலின பாகுபாடு இருப்பது சமநிலையின்மையைக் குறிக்கிறது.

கூடுதலாக, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) மற்றும் தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) ஆகியவற்றின் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், பிராந்தியம், வருமானம், சாதி மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையிலான டிஜிட்டல் சமத்துவமின்மையை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க: 22% பணியாளர்கள் தங்கள் பணியிடங்களில் வன்முறையை சந்திக்கின்றனர்- ஐநா அறிக்கை!

அறிக்கையில் வழங்கப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் 100 பேருக்கு 57.29 இணைய சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர், மேலும் அந்த எண்ணிக்கை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கணிசமாகக் குறைவு. கிராமப்புறங்களில் 100 பேருக்கு இணைய சந்தாதாரர்கள் 34க்கும் குறைவாக உள்ளனர். நகர்ப்புற மையங்களில் இது 101க்கு மேல் உள்ளது.

சமமான சமூக பொருளாதார கட்டமைப்பு கொண்டுவர டிஜிட்டல் மாற்றம் மட்டுமே ஒரு தீர்வாக இருக்க முடியாது என்றாலும் இதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்க வென்றும் என்று நிறுவ முயன்றுள்ளனர். “கல்வி, சுகாதாரம் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றின் உலகளாவிய வழங்கலில் உள்ள கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது டிஜிட்டல் மாற்றமும் பின் தொடரும், என்று "Oxfam India CEO அமிதாப் பெஹர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

First published:

Tags: Analysis Report