முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டில் 27% பெரியவர்கள் மட்டுமே நிதி குறித்த கல்வியறிவு கொண்டுள்ளனர்.. ஆய்வில் தகவல்!!

நாட்டில் 27% பெரியவர்கள் மட்டுமே நிதி குறித்த கல்வியறிவு கொண்டுள்ளனர்.. ஆய்வில் தகவல்!!

நிதி கல்வியறிவு குறித்து ஸ்ட்ரீக், நியோபேங்க் நடத்திய வினாடி வினா போட்டியில், 16.7% இந்தியக் குழந்தைகள் மட்டுமே சராசரியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

நிதி கல்வியறிவு குறித்து ஸ்ட்ரீக், நியோபேங்க் நடத்திய வினாடி வினா போட்டியில், 16.7% இந்தியக் குழந்தைகள் மட்டுமே சராசரியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

நிதி கல்வியறிவு குறித்து ஸ்ட்ரீக், நியோபேங்க் நடத்திய வினாடி வினா போட்டியில், 16.7% இந்தியக் குழந்தைகள் மட்டுமே சராசரியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

  • Last Updated :

இந்தியாவில் பெரியவர்களிடையே (Adults)  நிதி கல்வியறிவு விகிதம் என்பது 27 சதவீதமாக உள்ளதாக உலகளாவிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதுவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கிலாந்தில் 67 சதவீதமாகவும், சிங்கப்பூரில் 59 சதவீதமாகவும் அல்லது அமெரிக்காவில் 57 சதவீதமாகவும் உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவிலே இந்த விகிதம் குறைவாக உள்ளது என்பது ஸ்ட்ரீக் நடத்திய உலகளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.

பணம் கையாளுதல், முதலீடு, வரவு செலவு கணக்கு, நிதி நிர்வாகம் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அறிவு குறித்து சோதிக்க ஸ்ட்ரீக், நியோபேங்க்  சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது.. இப்போட்டியில், 16.7% இந்தியக் குழந்தைகள் மட்டுமே சராசரியாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தென்னிந்தியாவில் இருந்து பதிலளித்தவர்கள் சராசரியாக 47.86% மதிப்பெண்களுடன் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், கிழக்கு இந்தியாவில் பதிலளித்தவர்கள் சராசரி மதிப்பெண்ணுடன் 39.41% மட்டுமே செயல்பட்டதாகவும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, நகர வாரியாக பார்க்கும்போது, குர்கானில் இருந்து பதின்வயதினர் அதிகபட்ச சராசரி மதிப்பெண்ணாக 52.3 சதவீதமும், ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்ணாக 38.41 சதவீதம் பெற்றுள்ளதாக நகர வாரியான செயல்திறன் காட்டுகிறது.

11 முதல் 17 வயதினருக்கான வினாடி வினா போட்டிக்கு, நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், வங்கித் தயாரிப்புகள், நாணயம், தனிப்பட்ட நிதி, பணம் செலுத்தும் முறைகள், கடன்கள், கடன் மற்றும் முதலீடு போன்ற தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

Also read:  கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு கொரோனா பாதிப்பு - பஞ்சாபில் பாஜகவுக்கு பின்னடைவு?

இதில், 45 சதவீத மாணவர்களுக்கு பட்ஜெட்டை எவ்வாறு உருவாக்குவது என்று தெரியவில்லை, ஏறத்தாழ 60 சதவீத மாணவர்கள் முதலீடுகள் பற்றியும், அதன் வெகுமதி முதல் ஆபத்து வரையும் மற்றும் பணத்தின் நேர மதிப்பு ஆகியவை புரியவில்லை.

மேலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்ஜெட், முதலீடுகள், பல்வகைப்படுத்தல், முதலீடுகள் திரும்பப் பெறுவதற்கான ஆபத்து போன்ற தலைப்புகளில் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மறுபுறம், மாணவர்கள் வட்டி கணக்கீடு, வங்கித் தயாரிப்புகள் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படைகள் போன்ற தலைப்புகளில் ஓரளவு நன்றாகப் புரிந்து வைத்துள்ளர்.

ஸ்ட்ரீக்கில் பணிபுரியும் அனைவருக்கும் இந்த வினாடி வினா, அறிவுக்கண்ணை  திறக்கும் நிகழ்வாக இருந்தது. இது ஒரு நிறுவனமாக எங்கள் இலக்கு மற்றும் பார்வையில் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது - அடுத்த தலைமுறை பணத்தில் புத்திசாலியாக இருக்கவும், எதிர்காலத்தில் விவேகமான மற்றும் கல்வியறிவுடன் கூடிய நிதி முடிவுகளை எடுக்கவும் உதவியுள்ளது.

தனிப்பட்ட நிதி மேலாண்மை என்பது ஒரு மென்மையான திறமையாகும், மேலும் அவர்கள் கணிதம் அல்லது இயற்பியலை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதிலிருந்து வேறுபட்ட கற்றல் செயல்முறையை அனுபவிப்பதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம்,” என ஸ்ட்ரீக்கின் இணை நிறுவனர் மிதுல் மேத்தா தெரிவித்துள்ளார்.

top videos

    இதையும் படிங்க: பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை இன்றி ரேஷன் பொருள் வழுங்குக - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    First published:

    Tags: India, Personal Finance