• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை...மீறினால் 6 மாத சிறைதண்டனை - ஆந்திரா அரசு அதிரடி

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை...மீறினால் 6 மாத சிறைதண்டனை - ஆந்திரா அரசு அதிரடி


ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

ஆன்லைன் சூதாட்டம் ஆடினால் 6 மாத சிறைதண்டனை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஆன்லைனில் போக்கர், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு ஆந்திர அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா, இளைஞர்களை இவ்வகை விளையாட்டுகள் தவறாக வழிநடத்துகின்றன என்றார்.

    இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆந்திர அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்வோருக்கு ஓராண்டு சிறையும், முதல்முறை அபராதமும் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறை தவறு செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

    ALSO READ |  பப்ஜிக்கு தடை விதித்திருப்பது அரசின் சிறந்த முடிவு - இயக்குநர் அறிவழகன் வரவேற்பு

    ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் விளையாடுவோருக்கு 6 மாத சிறை தண்டனையும் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: