வெங்காயம் விலை உயர்வால் சிக்கிய திருடன்... கட்டி வைத்து அடி, உதை...!

திருடிய நபர்

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் வெங்காய மூட்டை திருடியவரை வியாபாரிகள்அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட் ரங்கப்பிள்ளை வீதியில் அனைத்து காய்கறிகளும் மொத்த விலையில் விற்கப்படுகின்றன. தினந்தோறும் விடியற்காலையில் இந்த காய்கறிகள் விற்பனை நடைபெற்று வழக்கம். இதற்காக நள்ளிரவில் காய்கறிகள் மூட்டை மூட்டையாக வந்து இறங்கும்.

இதில், இன்று காலை வந்து இறங்கிய வெங்காயம் மூட்டைகளில் ஒரு மூட்டைய முத்திரையர் பாளையத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். சந்தேகமடைந்த வியாபாரிகள் அவரை மடக்கி பிடித்த போது அவர் வெங்காயம் மூட்டை திருடுவது தெரியவந்தது. உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து அடித்து, உதைத்து அருகில் கட்டி போட்டனர்.

இதுகுறித்து பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் காளிதாசனை பிடித்துச் சென்றனர். இதேபோல் அவர் அடிக்கடி மார்க்கெட் பகுதியில் காய்கறிகளை மூட்டை மூட்டையாக திருடி வந்துள்ளார். அவற்றின் விலை பெரும் அளவில் இல்லாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், அவர் தப்பித்து வந்தார்.

தற்போது வெங்காயத்தின் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு வெங்காயத்தையும் எண்ணி எண்ணி மூட்டை கட்டப்பட்டு வரும் நிலையில்,  காய்கறி திருடியவர் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankar
First published: