கிலோ 25 ரூபாய்க்கு வெங்காயம்... கதவை உடைத்துக் கொண்டு ஓடிய பொதுமக்கள்...!

 • News18
 • Last Updated :
 • Share this:
  மானிய விலையில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்க மக்கள் முந்திக் கொண்டு ஓடிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

  ஆந்திர அரசின் உத்தரவின் பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள் மூலம் மானிய விலையில் கிலோ 25 ரூபாய் அடிப்படையில் ஒரு குடும்ப அட்டைத்தாரருக்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

  விஜயநகரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தை வாங்க அதிகாலை முதலே பெண்களும், முதியவர்களும் திரண்டனர். கதவை திறந்துவிட்டால் போதும் வெங்காயத்தை அள்ளிவிடலாம் என காத்திருந்தவர்களை, கட்டுப்படுத்த முடியாமல் சந்தை பணியாளர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் கதவை உடைத்துக் கொண்டு பெண்களும், ஆண்களும் முந்திக் கொண்டு ஓடினர்.

  மானிய விலையில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்க மக்கள் முந்திக் கொண்டு ஓடிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. கதவை திறந்துவிட்டால் போதும் வெங்காயத்தை அள்ளிவிடலாம் என காத்திருந்தவர்களை, கட்டுப்படுத்த முடியாமல் சந்தை பணியாளர்கள் திணறினர்

  கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்படி இருந்தும் வெங்காயத்தை வாங்காமல் செல்வதில்லை என்ற முழுமூச்சுடன் இருந்து ஒரு கிலோ வெங்காயத்தை 25 ரூபாய்க்கு இல்லத்தரசிகள் பெற்றுச் சென்றனர்.
  Published by:Sankar
  First published: